கல்முனை ஆதார வைத்தியசாலையின் நடமாடும் வைத்திய முகாம் வீரமுனையில் இடம்பெற்றுள்ளது.
நேற்று (22) வீரமுனை பகுதியில், எங்கள் சமூகத்தின் ஒருங்கிணைப்பில் வைத்தியர் கந்தவனம் விவேகானந்தன் அவர்களின் அனுசரனையில், சமூக செயற்பாட்டாளரும் கல்வித்துறையில் பல சேவைகளை புரிந்து வருபவருமான அஜந்தா ஞானமுத்து அவர்களின் ஏற்பாட்டில் சிறப்பான நடமாடும் மருத்துவசேவை நடைபெற்றது. இதில் கல்முனை RDHS அலுவலகம், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை, காரைதீவு பிரதேச வைத்தியசாலை மற்றும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ஆகியவை இணைந்து செயல்பட்டன.
இங்கு பல்வேறுபட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக நிகழ்வுகள் சிறப்புற்றிருந்தது.
மட்டுநகர் இருந்தும் சமுக செயற்பாட்டாளர்கள் பலர் வளவாளர்களாக பங்கு பற்றி சிறப்பித்திருந்தனர்
சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மற்றும் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு RKM பாடசாலையில் சேவை வழங்கப்பட்டது. சுமார் 500 நோயாளிகள் வெளிநோயாளர் சிகிச்சை, கிளினிக் பரிசோதனை, NCD பரிசோதனை, பல் மற்றும் கண் சிகிச்சைகள் மூலம் பயன்பெற்றனர். 150 பேருக்கு கண்ணாடிகளும் வழங்கப்பட்டன.
மேலும், GCE O/L தேர்விற்கு தயாராகும் 300 மாணவர்களுக்கு வெற்றிக்கான வழிமுறைகள் குறித்த ஊக்கப்பூர்வ நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
அந்த ஊக்கவுரை நிகழ்ச்சி மாணவர்களின் மனதில் நம்பிக்கையின் தீபத்தை ஏற்றியது. இலக்கை நோக்கி தெளிவான பாதை, ஒழுக்கம், முயற்சி, தன்னம்பிக்கை ஆகியவை வாழ்க்கை வெற்றியின் அடித்தளங்கள் என்பதை வலியுறுத்தியது. கனவுகளை நனவாக்கும் சக்தி அவர்களுக்குள் இருப்பதை உணர்த்திய ஒரு மறக்கமுடியாத தருணமாக அது அமைந்தது.
மருத்துவ முகாமிற்கான முழு பொறுப்பும் கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியலாநிதி குணசிங்கம் சுகுணன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன்.
மாணவர்களுக்கான ஊக்கவுரையிலும் பணிப்பாளர் பங்குபற்றி மாணவர்களை வாழ்கையின் வெற்றிப்பாதைக்கு வழிகாட்டியதும் சிறந்த விஷயமாக
அமைந்தது














