கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் மாணவி அக் ஷராவின் நடன அரங்கேற்றம்
பாறுக் ஷிஹான்
கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் மாணவி அக் ஷராவின் பரதநாட்டிய அரங்கேற்றம் இன்று சிறப்பாக நடைபெற்றது.
கல்முனை மரிய தெரேசியாஸ் கல்லூரி மண்டபத்தில் இன்று சனிக்கிழமை(07) பி.ப. 1.45 மணிக்கு இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிகளவானோர் பங்கேற்றனர்.
அக் ஷரா நிருத்திய ஷேத்ரா நாட்டியப் பள்ளி அதிபர் மாதுமையாள் வரதராஜனின் மாணவி என்பதுடன் மதுசூதனன் தம்பதியரின் புதல்வியுமாவார்.
மேலும் கிழக்கு பல்கலைக்கழக ஓய்வுநிலை பேராசிரியர் பால சுகுமார் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.










