கல்முனையில் செல்வி. மதுசூதனன். அக் ஷரா பதரநாட்டிய அரங்கேற்றம் – 07.03.2025
செல்வி மதுசூதனன் அக்ஷராவின் பதரநாட்டிய அரங்கேற்றம் எதிர்வரும் 07.03.2026 ஆம் திகதி பி.ப 1.45 மணிக்கு கல்முனை மரிய தெரேசியாஸ் கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இவர் நிருத்திய ஷேத்ரா நாட்டியப்பள்ளி அதிபர் திருமதி மாதுமையாள் வரதராஜன் அவர்களின் மாணவியும் திரு.திருமதி மதுசூதனன் சுகிர்தமலர் தம்பதியினரின் புதல்வியுமாவார்.
கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையில் கல்வி கற்ற இவர் 17 வருடங்களாக நடனம் பயின்று வருகின்றார்.
தேசிய மட்ட நடன போட்டிகளில் பங்குபற்றி பல சாதனைகளை வென்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளார். அரச சிறுவர் நாடகப் போட்டியில் இரு தடவைகள் பங்கு பற்றி தேசிய மட்டத்தில் முதலாம், இரண்டாம் இடங்களைப் பெற்றிருந்தார்.
சப்ரகமுவ பல்கலைக்கழகம் Information System கற்கைக்கும் தெரிவாகியுள்ளார்.
கடந்த 30 வருடங்களின் பின் கல்முனை மண்ணில் 1வது பரதநாட்டிய அரங்கேற்றம் செல்வி அக் ஷரா மதுசூதனன் அவர்களின் நடனம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
https://www.facebook.com/100063609998845/videos/pcb.1518289480301371/1406276470978165


