இன்று இறக்காமக் கோட்டக் கல்விப் பணிப்பாளராக சியாத் பதவியேற்பு

( வி.ரி.சகாதேவராஜா)

 சம்மாந்துறை வலயத்தின் இறக்காமக் கோட்டக் கல்விப் பணிப்பாளராக ஏ.எம்.சியாத் (பிரதிக் கல்விப் பணிப்பாளர்) இன்று (28) செவ்வாய்க்கிழமை தனது கடமையினை ஏற்றுக்கொண்டார்.

இந் நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள்,ஆசிரியர் ஆலோசகர்கள் கலந்து சிறப்பித்தனர் .

அதேவேளை,  இறக்காமம் கோட்டக் கல்விப்பணிப்பாளராக இருந்த யூ.எல். மகுமூது லெவ்வை 39 வருட அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றதையடுத்து இப் புதிய நியமனம் வழங்கப்பட்டது.

இறக்காமம் கோட்டக் கல்விப்பணிப்பாளர் யூ.எல். மகுமூது லெவ்வையை பாராட்டி வழியனுப்பி வைக்கும் நிகழ்வும் இன்று நடைபெற்றது.

நாளை (29) பூரணை விடுமுறை நாள் என்பதால் மேற்படி இரு நிகழ்வுகளும் இன்று சமகாலத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.