மருதமுனை ,பெரிய நீலாவணை, பாண்டிருப்பு பகுதியில் திருடர்களின் தொல்லை
பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குபட்ட மருதமுனை பாண்டிருப்பு பெரிய நீலாவணை பகுதியில் அண்மைக்காலமாக திருட்டுச்சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக இரவு பகல் வேளைகளில் இத்திருட்டு சம்பவங்கள் இடம்பெறுவதுடன் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.
அத்துடன் எதிர்வரும் நோன்பு காலம் ஆகையினால் சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டம் வீடுகளில் சுய பாதுகாப்பு ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.மேலும் அண்மையில் 18 வயது மதிக்கத்தக்க மூன்று சந்தேக நபர்கள் மருதமுனை பகுதியில் வீடு ஒன்றின் கதவினை உடைத்து ரூபா 25 ஆயிரம் பணம் பெறுமதியான கைத்தொலைபேசி என்பவற்றை திருடிய நிலையில் பெரிய நீலாவணை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் வசதி உள்ளவர்கள் தங்களது சொத்துக்களை பாதுகாப்பதற்காக சிசிடிவி கமராக்களை பொருத்துவதுடன் தமது பிரதேச பாதுகாப்பினை உறுதிப்படுத்த பொலிஸாருடன் இணைந்து செயற்பட முன்வருமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.
மேலும் போதைப்பொருட்கள் விற்பனை பாவனை தொடர்பில் ஏதாவது தகவல் தெரிந்தால் உடனடியாக பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.
எனவே பிரதேசத்தில் இடம்பெறும் திருட்டு சம்பவங்களில் இருந்து பொதுமக்கள் தங்களது உடமைகளையும் சொத்துக்களையும் பாதுகாக்கும் வகையில் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
