பெரியநீலாவணை ஸ்ரீ மகா பெரியதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவப் பெருவிழா நாளை ஆரம்பம்!
செளவியதாசன்
பெரியநீலாவணை ஸ்ரீ மகா பெரியதம்பிரான் ஆலயத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த உற்சவப் பெருவிழா நாளை (29) சங்காபிஷேகத்துடன் சிறப்பாக ஆரம்பமாகிறது.
தொடர்ச்சியாக ஏழு நாட்கள் நடைபெறும் இவ்வுற்சவம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி கும்பம் சொரிதல் நிகழ்வுடன் இனிதே நிறைவுபெறவுள்ளது.
திருவிழாவின் முதல் நாளான ஜூலை 29ஆம் திகதி ஊர்காவல் பண்ணல் நிகழ்வு நடைபெறவுள்ளது. மூன்றாம் நாளான ஜூலை 31ஆம் திகதி ஸ்ரீ மகா பெரியதம்பிரான் முத்துச் சப்பரத்தில் வீதியுலா வரும் நிகழ்வும், ஆறாம் நாளான ஆகஸ்ட் 3ஆம் திகதி விநாயகர் பானை எடுத்தல் நிகழ்வும் விசேட அம்சங்களாக இடம்பெறவுள்ளன.
திருவிழா நாட்களில் அனைத்து பக்தர்களும் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு ஸ்ரீ மகா பெரியதம்பிரானின் அருளாசியைப் பெற்றுச் செல்லுமாறு ஆலய பரிபாலன சபையினர் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.



