கல்முனை வடக்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்பில் மலையகம் நோக்கி பெருமளவில் நிவாரணப்பணி

நாட்டில் ஏற்பட்ட பேரனர்த்தம் காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கான நிவாரணப்பணி கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பில் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்முனை, பாண்டிருப்பு ,நற்பிட்டிமுனை, பெரியநீலாவணை, சேனைக்குடியிருப்பு ஆகிய கிராமங்களில் உள்ள இளைஞர்கள் ,விளையாட்டுக்கழகங்கள் தங்கள் கிராமங்களில் நிவாரணப்பொருட்களை சேகரித்தனர். அத்துடன் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் முன்பாகவும் பொருட்கள் சேகரிக்கப்பட்டு பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பு மற்றும் கல்முனை பொலிஸ் நிலையம், கல்முனை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் குறித்த உலர் உணவுப்பொருட்கள் பொதி செய்யப்பட்டு மலையகம் நோக்கி எடுத்துச் செல்லப்பட்டன.