மெதடிஸ்த திருச்சபையினால் நாளை பெரியநீலாவணையில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கல்!
(என். செளவியதாசன்)
எதிர் வரும் 08.12.2025 ( திங்கள்கிழமை ) பிற்பகல் 2.00 மணிக்கு கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் பெரிய நீலாவணையில் அமைந்துள்ள அற்கின்ஸ் அபிவிருத்தி மேம்பாட்டுத் திட்டத்தினால் அண்மைய வெள்ளப்பெருக்கினால் பாதிப்புற்ற அதன் பயனாளிகளுக்கான உலர் உணவு பொதிகளை வழங்கப்படவுள்ளன.
கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் சேகர முகாமைக்குரு அருட்திரு ரவி முருகுப்பிள்ளை தலைமையில் நடைபெறும்.இதற்கான ஒழுங்குகளை திட்ட முகாமையாளர் திருமதி சுவர்ணா ரவீந்திரன் மேற்கொண்டு வருகிறார்.
