மெதடிஸ்த திருச்சபையினால் (08) பெரியநீலாவணையில் 250 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.

(என். செளவியதாசன்)

கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் பெரிய நீலாவணையில் அமைந்துள்ள அற்கின்ஸ் அபிவிருத்தி மேம்பாட்டுத் திட்டத்தினால் அண்மைய வெள்ளப்பெருக்கினால் பாதிப்புற்ற 250 குடும்பங்களுக்கு 7500/- ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன.


கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் சேகர முகாமைக்குரு அருட்திரு ரவி முருகுப்பிள்ளை தலைமையில் ஜெப ஆராதனையுடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு அனரத்ததில் உயிரிழந்த உறவுகளுக்காக தீபச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதற்கான ஒழுங்குகளை திட்ட முகாமையாளர் திருமதி சுவர்ணா ரவீந்திரன் மேற்கொண்டார். இன் நிகழ்வில் ஒய்வு பெற்ற அதிபர் திரு. V. பிரபாகரன், கிராமசேவகர் இரு v. கார்த்திக்,சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் T.கலா, மற்றும் பலரும் கலந்துகொண்டு நிவாரண பொதிகளை வழங்கிவைத்தனர்.