(என். செளவியதாசன்)

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு நிர்கதியாகியுள்ள மக்களுக்கு நிவாரணம் சேகரிக்கும் பணி பெரியநீலாவணையிலும்,இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டது.. இதன்போது பொதுமக்கள் தங்களால் இயன்ற நிவாரண உதவிகளை அத்தியாவசிய பொருட்களாக வழங்கி வருகின்றனர்.

இந்த நிவாரண பொருட்களை சேகரிக்கும்போது பெரியநீலாவணை Red cross தொடர்மாடி பகுதியில் உள்ள தாய் ஒருவர் தனது ஒரு வயதே ஆன குழந்தைக்கு சிறிது சிறிதாக பணம் சேகரித்து வந்த உண்டியலை நிவாரண உதவிக்காக அந்த குழந்தையின் கையினால் வழங்கி வைத்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளதுடன்,ஒரு பாடசாலை மாணவன் தனக்காக வைத்திருந்த பாடசாலை உபகரணங்கள் அடங்கிய பையை நிவாரண உதவியாக வழங்கியமை அனைவரது கவனத்தை ஈர்த்த ஒன்றாக பார்க்க முடிந்தது.

வளரும்போதே மற்றவர்களுக்கும் உதவ்வேண்டும் என்ற சிறந்த எண்ணத்தை கொண்டுள்ள இவ்வாறாள சிறுவர்கள் சமூகத்திற்கு எடுத்துக்காட்டானவர்களே