கல்முனை சுவாமி விபுலாநந்த வித்தியாலய விபுலம் ஏற்பாட்டுக் குழுவினர் 2025 ஆம் ஆண்டு வாசிப்பு மாதத்தைச் சிறப்பிக்கும் வகையில் பல்வேறு செயற்கருமங்களையும் கலை நிகழ்வுகளையும் முன்னெடுத்திருந்தனர்.

வித்தியாலய அதிபர் .கோ.ஹிரிதரன் அவர்களின் வழிகாட்டல் ஆலோசனைகள் என்பனவற்றாலும் பிரதி அதிபரும் தமிழ்ப்பாடத் துறை ஆசிரியருமான .சரவணமுத்து நவேந்திரன் (விவேகவெளி தமிழேந்திரன்) அவர்களது முனைப்பான முன்னெடுப்புகளாலும் நிகழ்வுகள் யாவும் சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கின்றன.

அந்த வகையில் 29.10.2025 – 31.10.2025 காலப்பகுதியிலான இறுதிக்கட்ட நிகழ்வுகளும் எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பதாக அமைந்திருந்தன.

வகுப்பறையில் வாசிப்புச் செயற்பாடுஇ வித்தியாலயத்தின் இயற்கை எழில் மிக்க ஆலமர நிழலில் கதை கூறுதல் நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றது. மறைந்து செல்லும் கதை கூறும் பண்பாட்டு மரபை பேணும் வகையில் இது இடம் பெற்றது.