கல்முனை ஆதார வைத்தியசாலையின் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்வுகள்

மக்கள் நோய்கள் பற்றி விழிப்புணர்வு பெறுவதனால், அதனை தடுக்க முடியும் என்ற நோக்கில்,
உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு நோய்களுக்குமான தினங்களை ஒதுக்கி அன்றைய தினத்தில் பலவிதமான விசேட விழிப்புணர்வு நிகழ்வுகளை நடாத்த ஊக்கப்படுத்துகின்றது.

இந் நிகழ்ச்சி நிரலிற்கு அமைவாக கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியலாநிதி குணசிங்கம் சுகுணன் அவர்களின் தலைமைத்துவத்தில் பல நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது.

உலக பாரிசவாத தினம் 29/10/2025, மற்றும்  உலக மார்புபுற்றுநோய் மாதம்
என்வற்றிற்கான விழிப்புணர்வு நிகழ்வாக, கல்முனை ஆதார வைத்தியசாலையின் தொற்றா நோய் தடுப்பு பிரிவினரால் ஒழுங்கு செய்யப்பட்ட நடைபவனி (29) நடைபெற்றுள்ளது.

இவ்வாறான பல நிகழ்வுகளை கல்முனை பிராந்திய பணிப்பாளராக இருந்து  நடாத்தி சாதனை படைத்தவர்
கல்முனை ஆதார வைத்திய சாலையின் பணிப்பாளர் வைத்தியலாநிதி குணசிங்கம் சுகுணன் அவர்கள் என்பது யாவரும் அறிந்த விடயம்.

அந்த வகையில் பாரிசவாத தினம், மார்புபுற்றுநோய் மாதம் என்பவற்றிற்கான விழிப்புணர்வு நடைபவனி நிகழ்வு, சேவையாளரின் ஊடாக மக்கள் விழிப்புணர்வு பெறும்வகையில் இடம் பெற்றுள்ளது.

இந்நோய்பற்றி பணிப்பாளரினால் அனைவரும் விழிப்புணர்வு பெறும் சிறப்புரையும் இடம்பெற்றுள்ளது.
இந் நிகழ்வுகளினால் மக்கள் மனதிலும் நோய் பற்றிய ஓர் புரிந்துணர்வு ஏற்படும் என நம்பப்படுகிறன்றது.

அத்துடன் (29) இன்று இதன் தொடர்நிகழ்வாக  வைத்திய நிபுணர் ஆர். ராஜவர்மன் அவர்களின் பாரிசவாதநோய்  சிறப்பு விரிவுரையும் இடம்பெற்றுள்ளது.

இதன் வாயிலாக இந் நோய் காரணமாக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு வரும் பாரிசவாத நோயாளிகளை உடனடியாக அணுகும் முதற்கட்ட சிகிச்சைக்கு மேலும் சேவையாளர்களை தயார்படுத்துதலாகும். என அறிய முடிகின்றது.

நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவைகள்

  1. நான்கு பேரில் ஒருவருக்கு stroke வாழ்க்கை காலத்தில் வரலாம், இலங்கையில் வருடத்துக்கு 4000 அதிகமான இறப்புக்கள்.
  2. முக்கிய காரணம் அதிக குருதியமுக்கம்
  3. Hospital HLC clinic இற்கு வந்து பரிசோதனை செய்யுங்கள் ( தொற்றா நோய் )
  4. 45 நிமிட உடற்பயிற்சி
          ஆரோக்கிய உணவு
          Stop Smoking
          Stress Reduction
          Diabetes, BP, Cholesterol control
    செய்து உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.