கல்முனையில் மாபெரும் கலை நிகழ்வுகளின் சங்கம் – 31.10.2025

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் கல்முனையில் பல்லின சமூகங்களின் கலை நிகழ்வுகளின் சங்கமம் 31.10.2025 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு கல்முனை – 03 கடற்கரை வளாகத்தில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.


கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் நடைபெறவுள்ள இந் நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமார், கல்முனை பிரதேச செயலாளர் ரி.எம்.எம். அன்சார் ஆகியோரும், கௌரவ அதிதிகளாக கல்முனை மாநகரசபை ஆணையாளர் ஏ.ரி.எம்.றாபி ,நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகி சஜிந்ரன், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் ஆகியோரும், விஷேட அதிதிகளாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள ஓய்வு நிலை பணிப்பாளர் ச.நவநீதன், சிரேஷ்ட எழுத்தாளர் உமா வரதராஜன் ,மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல். தௌபீக், சிரேஷ்ட கவிஞர் சோலைக்கிளி ஆதிக் ஆகியோர் உட்பட பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இந் நிகழ்வில் உள்ளுர் கலைஞர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் கௌரவிப்புக்கள் என பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இந் நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
நிகழ்ச்சித் தொகுப்பு கலாசார உத்தியோகத்தர் எஸ்.ருபேசன்
நன்றியுரை கலாசார உத்தியோகத்தர்