கல்முனையில் பொதுப் போக்குவாத்து சேவை வாகனங்களுக்கு ‘சரோஜா’ ஸ்ரிக்கர்
(அஸ்லம்)
கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர், பெண்கள் பிரிவின் ஏற்பாட்டில் ‘சரோஜா’ எனும் பாதுகாப்பற்ற சிறுவர், சிறுமியர் தொடர்பிலான விழிப்புணர்வு ஸ்ரிக்கர் ஒட்டும் வேலைத் திட்டம் செவ்வாய்க்கிழமை (28) கல்முனை நகரில் முன்னெடுக்கப்பட்டது.
கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் மற்றும் அரச, தனியார் பஸ்கள் அனைத்திலும் இந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
இதில் பொலிஸ் உத்தியோகத்தர்கள், கல்முனை பிரதேச செயலகம் மற்றும் கல்முனை உப பிரதேச செயலக சிறுவர், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இதேபோன்று சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எம்.சம்சுதீன் தலைமையில் சாய்ந்தமருது பிரதேசத்திலும் குறித்த ஸ்டிக்கர் ஒட்டும் வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


