சாய்ந்தமருதில் களைகட்டிய ஷம்ஸ் ஓவிய கண்காட்சி !
( காரை சகா)
சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலய “ஷம்ஸ் ஓவிய கண்காட்சி” கடந்த நான்கு தினங்களாக (14-17) மிகவும் கோலாகலமாக நடைபெற்று வந்தது.
வித்தியாலய அதிபர் திருமதி நஸ்ரின் றிப்கா அன்சார் தலைமையில் நடைபெற்றுவந்த இந் நான்கு நாள் தொடர் ஓவிய கண்காட்சியை கல்விப்பணிப்பாளர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் எனப் பல தரப்பினரும் பார்வையிட்டு வந்தனர் .
அதிபர் திருமதி நஸ்ரின் றிப்கா அன்சாரின் அழைப்பையேற்று நேற்று (17) வெள்ளிக்கிழமை அம்பாறை மாவட்ட செயலகத்தின் பிரதம பொறியியலாளர் ஏ.எம்.ஷாஹிர் மற்றும் ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு பார்வையிட்டனர் .
அதிபருடன் சித்திர பாட பொறுப்பாசிரியர் திருமதி எஸ்.நஸீகா பர்வின் குறித்த கண்காட்சியை பார்வையிட வெளிப்படுத்தினார்.
தரம் 9 முதல் உயர்தர வகுப்புகள் வரையிலான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் படைப்புகள் அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பலரும் வியந்து பாராட்டினார்கள்.








