உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை சரிய ஆரம்பித்துள்ளது.! நாம் பழைய நகைகள் வாங்குவதை மீண்டும் ஆரம்பித்துள்ளோம் என்கிறார் கல்முனை சொர்ணம் குணா

( வி.ரி.சகாதேவராஜா)

உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை சரிய ஆரம்பித்துள்ளது. 4 லட்சத்து 10 ஆயிரம் இருந்த1 பவுண் தங்கம்  தற்போது  3 லட்சத்து 90 ஆயிரம் ரூபாவாக குறைந்துள்ளது.அதனால் நாம் பழைய நகைகள் வாங்குவதை மீண்டும் ஆரம்பித்துள்ளோம் .

இவ்வாறு கிழக்கின் பிரபல சொர்ணம் நகை மாளிகையின் கல்முனைப் பிராந்திய முகாமையாளர் கோ. குணபாலச்சந்திரன் (குணா) இன்று (18) சனிக்கிழமை தெரிவித்தார் .

எனது நகை வியாபார அனுபவத்தில் சமகாலத்தில் ஏற்பட்டது போன்று ஒரு பாரிய அதிகரிப்பும்  அதிகூடிய விலையையும் ஒருபோதும் நான் வாழ்க்கையில் கண்டதில்லை  என்று கூறும் குணா  மேலும் தெரிவிக்கையில்..

கடந்த வாரத்தில் வரலாற்றில் இல்லாத வகையில் இவ்வாறான திடீர் அதிகரிப்பு இடம்பெற்றது .

இதனால் எமது நகை வியாபாரமும் கணிசமான அளவு பாதிக்கப்பட்டு இருந்தது.

சீன நாட்டின் ஆதிக்கமே இதற்குக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. என்றார்.

இன்று தங்கத்தின் விலை 30 ஆயிரம் ரூபாவால் குறைந்துள்ளது. எனினும் நாளை என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது என்றார்.