பட்டிருப்பு கல்வி வலய சித்திர பாட ஆசிரியர்களுக்கான திறன் விருத்தி செயலமர்வு
(கலைஞர்.ஏ.ஓ.அனல்)
மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட சித்திர பாட ஆசிரியர்களுக்கான திறன் விருத்தி செயலமர்வு பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் சித்திர பாட சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் அரிகரன் தலைமையில் இன்று (17) நடைபெற்றது.
பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.சி.சிறிதரன் அவர்களின் சிறந்த வழிகாட்டலின் கீழ் நடைபெறும் இச்செயற்பாட்டின் வளவாளர்களாக மட்டக்களப்பு கல்வி வலய சித்திரப் பாட சிரேஷ்ட ஓய்வு நிலை ஆசிரியர் லியோ ஜெபராஜ் மற்றும் அம்பாறை DS சேனநாயக்கா கல்லூரியின் சிரேஸ்ட சித்திர பாட ஆசிரியர் A.S.N.P.அம்பே பிட்டிய ஆகியோர் கலந்துகொண்டனர்.
இரேகை வரைதல், வர்ணம் பயன்பாடுகள், நுட்ப முறைகள், வரைதாள் தெரிவு முறை மற்றும் பூரணப்பாடு போன்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டு மேம்பட்ட வரைதல் அபிவிருத்தி செயற்பாடுகளில் 25 ஆசியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது.





