கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற வாணி விழா
(கல்முனை நிருபர்)
கல்முனை மாநகர சபையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த வாணி விழா செவ்வாய்க்கிழமை மாநகர சபை கூட்ட மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மாநகர சபை பொறியியல் பிரிவின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ரஜினி சயானந்கள் தலைமையிலும் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் என். பரமேஸ்வர வர்மனின் நெறிப்படுத்தலிலும் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகர சபையின் கணக்காளர் மனாஸிர் அஹ்சன் விசேட அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இதன்போது சிவசிறி ஹரிஹரன் குருக்கள் ஆசியுரை வழங்கியதுடன் நவராத்திரி பூஜைகளையும் நடத்தி வைத்தார்.
மாநகர சபையின் களஞ்சியப் பொறுப்பாளர் கே. மகேந்திரராசா நன்றியுரை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்வில் மாநகர சபையின் பிரிவுத் தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் பங்கேற்றித்தனர். இந்த நிகழ்வுக்கு முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ உத்தியோகத்தர்களும் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கி நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை சிறப்பம்சமாகும்.



