இன்று பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய தவநிலை  ; தீமிதிப்பு நாளை!

( காரைதீவு  வி.ரி. சகாதேவராஜா)

மகாபாரத இதிகாச வரலாற்றைக் கூறும் இலங்கையின் பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு  திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தவநிலை நிகழ்வு இன்று(9) வியாழக்கிழமை நடைபெறும்.

நாளை(10) வெள்ளிக்கிழமை மாலை தீமிதிப்பு இடம் பெறும்.

கடந்த (23) செவ்வாய்க்கிழமை மாலை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமானது இம் மகோற்சவம்.

நேற்று 08 புதன்கிழமை வனவாசம் இடம்பெற்றது. 11.10.2025 சனிக்கிழமை பாற்பள்ளையத்துடன் உற்சவம்  நிறைவு பெறும்.

https://www.facebook.com/100063609998845/videos/pcb.1399129888883998/735555406174141