மட்டக்களப்பு பெரியகல்லாறு உதயபுரம் அருள்மிகு ஸ்ரீ வட பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த சகதிப் பெருவிழா கடந்த 27 சனியன்று திருக்கதவு திறந்தவுடன் பக்தி பூர்வமாக பக்தர்கள் புடைசூழ ஆரம்பமானது.
மறுநாள் ஞாயிறு அன்று வீர கம்பம் வெட்டச் செல்லுதலும் வாழைக்காய் எழுந்தருளப் பண்ணலும் திங்களன்று ஊர்காவல் திருஉலாவும் ( சப்பறதிருவிழா)லும் வெகு சிறப்பாக நடைபெற்றது.
தொடர்ந்து செவ்வாயன்று நோர்ப்பு கட்டுவதும் கடற்குளிப்பும் தீமூட்டுதலும் சம்பிரதாய பூர்வமாக பெருமளவு பக்தர்களின் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.
இறுதி நாளான இன்று நடைபெற்ற தீமிதிப்பு நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.


