கல்முனை இராமகிருஷ்ண மகாவித்தியாலய நவராத்திரி விழா!

கல்முனை இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தின் நவராத்திரி விழா 29.09.2025 திங்கட்கிழமை வித்தியாலய இந்துமாமன்றத்தின் ஏற்பாட்டில்
பாடசாலை அதிபர் எஸ்.அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது இந் நிகழ்வுக்கு அதிதிகளாக சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் அவர்களும், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் அவர்களும், ஆசிரிய ஆலோசகர் ( ஆரம்ப பிரிவு) கா.சாந்தகுமார் மற்றும் ஓய்வு நிலை அதிபர் திருமதி அ.பேரின்பராஜா உட்பட பலர் கலந்து சிறப்pத்தனர்.


இந் நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பான திட்டமிடலுடன் நடைபெற்றன.நிகழ்வில் வரவேற்புரையை இந்து மாமன்ற பொருளாளர் திருமதி கே.சிவசுந்தரமூர்த்தி ( ஆசிரியை) அவர்களும், நன்றியுரையை திரு.பி.இன்பராஜா ஆசிரியர் ( இந்துமாமன்ற செயலாளர் ) அவர்களும் நிகழ்த்தினர்.
மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.