பாறுக் ஷிஹான்
சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்களின் பாதுகாப்பு நலன் மற்றும் அவர்களின் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வானது பிரதேச செயலாளர் ரி.எம்.எம். அன்சார் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகளின் படி கல்முனை பிரதேச செயலக பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் திருமதி. எஸ்.எஸ் .எம். நௌபல் தலைமையில் இன்று கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலக முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. ஆர். சித்தி றகுமா ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஜெனிதா மோகன், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.கே.காமிலாவும்மா, உளவளதுணை உத்தியோகத்தர் திருமதி .ஏ.ஜெஸ்மின் போன்றோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வு கல்முனை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட முன்பிள்ளை பாடசாலை ஆசிரியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது.
















