சிறுவர் பாதுகாப்பு தொடர்பான உறுதிமொழி கூறி சத்தியப்பிரமாணம்
பாறுக் ஷிஹான்
கல்முனை பிரதேச செயலக கரையோர வலயங்களை அண்மித்த கிராமங்களில் வாழும் சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் நல்ல நிலைத்திருத்தலை கட்டியெழுப்புவதற்காக சமுதாய அடிப்படையிலான நிகழ்ச்சி திட்டதின் படி சமூக அமைப்புகளின் உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வானது பிரதேச செயலாளர் ரி.எம்.எம். அன்சார் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகளின் படி கல்முனை பிரதேச செயலக கிராம சேவக உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் யு.என்.குமாரவின் தலைமையில் கல்முனை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.ஷாஜித் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட மட்ட சிறுவர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் யு.எல். அஷாருடீன் வளவாளராக கலந்து சிறப்பித்தார்.
அத்துடன் பிரதேச செயலக சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு உத்தியோகத்தர்களான மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,மகளிர் அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர், முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வெளிநாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டதுடன் சமூக மட்ட அமைப்புக்களின் உறுப்பினர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது சிறுவர் பாதுகாப்பு தொடர்பான உறுதிமொழி கூறி சத்தியப்பிரமாணம் எடுக்கப்பட்டது.

















