பாண்டிருப்பு வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தில் இலவச யோகாசன பயிற்சிகள் – இணைந்து கொள்ளுங்கள்
பாண்டிருபு வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தினால் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் பிற்பகல் 3:30 மணி தொடக்கம் 5 30 மணி வரை யோகாசன பயிற்சிகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே யோகாசன பயிற்சிகளில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளோர் அனைவரும் பயிற்சிகளில் கலந்து கொள்ள முடியும். முற்றிலும் இலவசமாக நடைபெறவுள்ள இப்பயிற்சி நெறியை. இந்து கலாசாரத் திணைக்களத்தின் அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஜெயராஜி அவர்களது ஆலோசனைக்கு அமைய யோகாசனம் மற்றும் சிலம்பம் போன்றவற்றிற்கு வளவாளராக இருக்கின்ற குமாரதாசன் அவர்களின் வழிகாட்டலில் நடைபெறவுள்ளது.
இதற்கு முழுமையான ஆதரவினையும் ஆலோசனைகளையும் வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தின். பொறுப்பாளர். வல்லவர் தவத்திரு புண்ணியமலர் அம்மா அவர்கள். வழங்குவார்.
வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையம்
இடம் நெசவு நிலைய வீதி
பாண்டிருப்பு