( வி.ரி. சகாதேவராஜா)

வரலாற்றுப்பிரசித்தி பெற்ற நிந்தவூர் மடத்தடி  ஸ்ரீ மீனாட்சி அம்பாள்  ஆலயத்தின் பரிவார ஆலயமான சுந்தரேஸ்வரர் சிவன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்   (11) வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

அட்டப்பள்ளத்தைச் சேர்ந்த திருமதி கமலாதேவி விவேகானந்தம் குடும்பத்தினர் இவ்வாலயத்தை நிருமாணித்து கொடுத்துள்ளனர்.

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்களின் வழிகாட்டலில் கும்பாபிஷேக பிரதம குரு சிவஸ்ரீ இரத்தின மகேஸ்வரக் குருக்கள் தலைமையில் ஆலய குரு சிவஸ்ரீ சபா.கோவர்த்தன சர்மா முன்னிலையில் நடைபெற்றது.

ஆலய பரிபாலன சபையின் தலைவர் கி.ஜெயசிறில் உள்ளிட்ட நிருவாக சபையினர் அடியார்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

அட்டப்பள்ளத்தைச் சேர்ந்த திருமதி கமலாதேவி விவேகானந்தம் குடும்பத்தின் சார்பாக திருமதி ரஞ்சன் அகந்தினி மற்றும் மகன் திருஷாந் உள்ளிட்டவர்கள் கும்பாபிஷேக மலரையும் வெளியிட்டு வைத்தனர்.