கல்முனை வடக்கு (தமிழ்) பிரதேச செயலகத்தை அவமதிக்கும் செயல் இது! – அரியநேந்திரன்
அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்பது 1993.09.28 அன்று அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய பிரதேச செயலகமாக குறிப்பிடப்பட்டது.
ஆனால் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகமாக கருதப்பட்டதால் பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் போராடியும், நீதிமன்ற வழக்கு தாக்கல் செய்தும் எந்த முடிவும் இல்லை.
நல்லாட்சி 2015, காலத்தில் பிரதமர் ரணில் கணக்காளர் ஒருவரை நியமித்ததாக கூறி கல்முனை பிரதேச தமிழ் மக்களையும், தமிழ்தேசிய கூட்டமைப்பையும் முட்டாளாக ரணில் நினைத்து ஏமாற்றிய வரலாறுகளும் உண்டு.
முழுமையாக நிர்வாகத்தை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி தொடராக கோரிக்கை விடப்படும் இந்நிலையில் தற்போது கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை மீண்டும் உபசெயலகம் என அம்பாறை மாவட்ட அரச அதிபர் கல்முனை பிரதேச செயலகத்துடன் இணைத்து ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை நடத்துவது கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகம் கல்முனை பிரதேச செயலகத்திற்கு கீழ் இயங்கும் உப அலுவலகம் என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்படும்.
-அரியம்/09/09/2025-