பெரிய நீலாவனண விஷ்ணு மகா வித்தியாலயத்தில் இவ் வருடம் நடைபெற்ற புலமைப் பரீசில் பரிட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும், நினைவுசின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்ட அதே நேரம் பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.
அத்தோடு ஆரம்ப பிரிவு ஆசிரியர்களுக்கும் நினைவுசின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். நிகழ்வு பெரிய நீலாவணை கல்வி அபிவிருத்தி ஓன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதற்கு பெடோ அமைப்பு ஷ்தாபகர் ஆசிரியர் சுபராஜன், பெடோ அமைப்பு செயலாளர் ஆசிரியர் கொலின்ஷ் கலந்து சிறப்பித்தனர் .இதற்கு நிதி அனுசரனை வழங்கியவர் பெரியநீலாவணை எஸ். ஆர். ஜூவலரி உரிமையாளர் சசிந்திரராஜா என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.























