தமிழ் லெட்டரின் மகிழ்ச்சிப்பகிர்வில் ஊடகர் சகா கௌரவிப்பு 

( காரைதீவு  சகா)

தமிழ் லெட்டர் நிறுவனத்தின் “மகிழ்ச்சிப் பகிர்வு” நிகழ்வு அதன் தலைவர் ஏ.எல்.றமீஸ் தலைமையில் அட்டாளைச்சேனையில் வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.

இதில் ஊடகப் பணியில் 40 வருட காலமாக அர்ப்பணிப்புமிக்க சேவையாற்றி வரும் வித்தகர் விபுலமாமணி வீரி. சகாதேவராஜா  பாராட்டி கெளரவிக்கப்பட்டார்.

அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி முதல்வர் யு.எல்.உவைஸ் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளர் கலாநிதி எம். கோபாலரெத்தினம்.ஆகியோர் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கெளரவித்தனர்.