( வி.ரி.சகாதேவராஜா)

மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அரச, அரச சார்பற்ற அலுவலர்களுக்கான மத்தியஸ்தம் தொடர்பில் தௌிவூட்டும் பயிற்சி பட்டறையானது பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

கல்முனை வடக்கு பிரதேச செயலக மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியோகத்தர் கந்தசாமி அருட்பிரசாந்தன் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந் நிகழ்வில் மட்டு அம்பாறை மாவட்ட மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் எம் .ஆஸாத் வளவாளராக கலந்து கொண்டார் .

மத்தியஸ்தம் தொடர்பான விளக்கம் அதன் நடைமுறைகள் மற்றும் மத்தியஸ்த சபை மூலமாக கையாளப்படும் பிணக்குகள் மத்தியஸ்த சபையின் வளர்ச்சி என பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் பொதுமக்களுக்கான தௌிவூட்டல்களை வழங்கினர்.

அத்துடன் பயிற்சி செயலமர்வின் மூலம் மத்தியஸ்தம் தொடர்பில் முரண்பாடுகளை தீர்ப்பது தொடர்பாகவும் பயிற்சி வழங்கப்பட்டதுடன் எதிர்கால சமுதாயம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் தொடர்பாகவும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.