அன்னமலை ஸ்ரீ சக்தியின் 33 வருட வரலாற்றில் அதி கூடிய ஐந்து மாணவர் சித்தி 

(வி.ரி. சகாதேவராஜா)

சம்மாந்துறை வலயத்தின் நாவிதன்வெளி கோட்டத்தில் உள்ள அன்னமலை ஸ்ரீ சக்தி வித்தியாலய 33 வருடகால வரலாற்றில் அதி கூடிய ஐந்து மாணவர்கள் இம்முறை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றிருப்பதாக அதிபர் பொன்.பாரதிதாஸன் தெரிவித்தார்.

மாணவர்களான ரி.விவலக்சன் =151

பி. அஜீஸ்           =143

பி.சதுசன்          =142

கே. நவலக்சனா=140 

எம். அபிஷேக்    =132

ஆகியோரே இவ்வாறு சாதனையை ஈட்டி தந்தவர்களாவர்.

இவர்களை கற்பித்த ஆசிரியர் என். விவேகானந்தன் கடும் முயற்சி எடுத்து இந்த சாதனையை வரலாற்றில் பதித்துள்ளார்.

சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் செ.மகேந்திரகுமார் உடனடியாக தொடர்பு கொண்டு பாராட்டுகளை தெரிவித்தார்.

இம்முறை நாவிதன்வெளி கோட்டத்தில் அதிகூடிய 45 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.