நாளை கல்முனை பாண்டிருப்பில் வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தின் ஆன்மீக செயற்பாட்டு நிலையம் திறந்துவைக்கப்படவுள்ளது.
நாளைய தினம்(05) கல்முனை பாண்டிருப்பு நெசவு நிலைய வீதியில். வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தின் ஆன்மீக செயல்பாடுகளை முன்னெடுப்பதற்கான நிலையம் திறந்து வைக்கப்பட உள்ளது.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் வெளிபாட்டுக்கு அமைய. வல்லவர் தவத்திரு புண்ணியமலர் அம்மா அவர்களின். வழிகாட்டுதலில் இந்நிலையம் செயற்படும்.
அம்பாறை மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் ஜெயராஜீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்நிலையத்தை திறந்து வைப்பதுடன், ஓய்வு பெற்ற உதவி கல்வி பணிப்பாளர் விபுலமணி வீ.ரி. சகாதேவராஜா, மட்டக்களப்பு ஆதீன நிறுவுனர் மு.ஜெபாலன், ஓய்வு பெற்ற உதவி கல்வி பணிப்பாளர் கண வரதராஜன், சிவன் மானுட மேம்பாட்டு நிறுவன சுவாமி கலியுகவரதன். போன்ற அதிதிகளுடன் மற்றும் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்வேறு ஆன்மீக அதிதிகளும் ஆன்மீக ஆர்வலர்களும் இந்நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர்.
அன்றையதினம் அணையா தீபம்,அணையா அடுப்பு போன்றவையும் ஏற்றப்படும். ஆன்மீக பணிகளில் தங்களை இணைத்துக் கொண்டு அருட்பெருஞ்ஜோதி ஆகிய ஆண்டவரின் அருளைப் பெற்று மரணம் இல்லா பெருவாழ்வு வாழ. வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்துடன் இணைந்து. கொண்டு. ஆன்மீக ஆற்றலை வளர்த்துக் கொள்ள விரும்புவர்கள் அனைவரும் இணைந்து கொள்ளலாம் என வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு நிலையத்தின் ஆன்மீக இணைப்பாளர் கல்முனை நெற்றுக்கு தெரிவித்தார்.