நீதி கோரிய கையொழுத்துப் போராட்டம் கல்முனை மாநகர மத்தியில்  ஆரம்பித்து வைப்பு

பாறுக் ஷிஹான்

செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனித புதைகுழிகளுக்கானதும் நடைபெற்ற இனப் படுகொலைகளுக்குமான சர்வதேச நீதி கோரிய கையெழுத்துப் போராட்டத்தை   வியாழக்கிழமை(4) மாலை  கிழக்கில் அம்பாறை மாவட்டம் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர மத்தியில் ஸ்ரீ அம்பலத்தடி பிள்ளையார் ஆலயம் முன்பாக இக்கையெழுத்து சேகரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து ஆரம்பித்த இந்தக் கையெழுத்து போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான  கோவிந்தன் கருணாகரன் ,  முருகேசு சந்திரகுமார் , சுரேஷ் பிரேமசந்திரன், காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன், கல்முனை மாநகர சபையின் முன்னாள் எதிர்கட்சி தலைவர் ஹென்றி மகேந்திரன்,  இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் செயலாளரும் கல்முனை தொகுதி இணைப்பாளருமான அருள். நிதான்சன், சமூக சேவையாளர் இரா. பிரகாஷ் உட்பட தமிழ் தேசிய கட்சி உறுப்பினர்கள்  ஆதரவாளர்கள்  பிரதேச சபை  உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு ஆர்வமாகக் கையெழுத்து இட்டனர்.