செல்லையா பேரின்பராசா

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் நடாத்தப்படவுள்ள ஆங்கில மொழி மூல முன்பள்ளி கூடத்தின் திறப்பு விழா நேற்று 06.03.2026 வெள்ளிக் கிழமை காலை 09.00 மணியளவில் துறைநீலாவணையில் இடம்பெற்றது.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின்  தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில்  மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர், பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரன்,  போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் வி.மதிமேனன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

இவர்களுடன் இப் பிரதேச சபையின்  சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.குகநேசன்,  இப் பிரதேச சபையின் உப தவிசாளர் ஆலையப்போடி வசீகரன்  ஓய்வு நிலை அதிபர் பூ.நவரெத்தினராசா மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள்ஆகியோர் கௌரவ.  சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர். இவ் விழாவில் துறைநீலாவணை மக்கள் சார்பில் ஓய்வுநிலை அதிபரும் ஊடகவியலாளருமான செல்லையா பேரின்பராசா உரையாற்றினார்.

இந் நிகழ்வில் துறைநீலாவணைக் கிராமத்திலுள்ள முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.

அத்துடன் இக் கிராமத்தின் கல்வி வரலாற்றில் ஆங்கில முன்பள்ளியை முதன் முதலாக உருவாக்க உழைத்த தவிசாளர் மே.வினோராஜ் பிரதேச சபை உறுப்பினர் சு.இளமாறன் ஆகியோருக்கு ஊர் கூடி நன்றி தெரிவித்தமை சிறப்பம்சமாகும்.