டிருக்சன்
சியபத நிதி நிறுவனமானத்தின் 20ஆவது ஆண்டு நிறைவினையொட்டி கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் ஒத்துழைப்புடன் கல்முனை சியபத கிளையில் இன்று (2025.09.03) மாபெரும் இரத்த முகாம் ஒன்று அதன் ஊழியர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்து
சியபத நிதி நிறுவனத்தின் கிழக்குப் பிராந்திய சிரேஷ்ட பிராந்திய முகாமையாளர் திரு.மொகமட் பிறிம்சாத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வு பிராந்திய முகாமையாளர் திரு.மொகமட் பாகிஸ் மற்றும் கிளை முகாமையாளர் திரு.மொகமட் முஜிப் ஆகியோரின் நெறியாள்கையின் கீழ் சிறப்புற நடைபெற்றிருந்தது…
இந்நிகழ்வில் கல்முனை, மட்டக்களப்பு, சாய்ந்தமருது, அக்கரைப்பற்று சியபத கிளை ஊழியர்கள் உட்பட ஏராளமான வாடிக்கையாளர்களும் பொதுமக்களும் இரத்த கொடையாளர்களாக கலந்து கொண்டிருந்தார்கள்.
இன்று மாலை வரை இடம்பெற்ற இந்நிகழ்வில் சராசரியாக எழுபது இரத்த கொடையாளர்கள் தங்கள் குருதியினை வழங்கிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வின் இறுதியில் உரையினை நிகழ்த்திய கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியின் வைத்திய அதிகாரி, றிஸ்மியா அவர்கள் இவ்வாறான பயன்மிக்க முகாமினை ஒழுங்கு செய்திருந்த கல்முனை சியபத கிளை ஊழியர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து இருந்தார்.















