ஈழத்தமிழ்க் கலைஞர் ஒன்றியத்துடனான சந்திப்பு கல்முனையில் ; அனைவருக்குமான அழைப்பு!

ஈழத்தமிழ்க் கலைஞர் ஒன்றியம் நாட்டின் பலபகுதிகளிலும் கிளை அமைப்புகளைக் கொண்டு கலை இலக்கியச் செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்ற ஒரு அமைப்பாகும். இவ்வமைப்புக் கேட்டுக்கொண்டதற்கமைய அம்பாறை மாவட்ட கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களுடனான சந்திப்பொன்று எதிர்வரும் 07.09.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணிக்கு கல்முனை எழுத்தாளர் ஒருங்கமைப்பு மையத்தின் ஏற்பாட்டில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

இடம் : கலாசார மத்திய நிலையம், பாண்டிருப்பு-02 (வடபத்திர காளியம்மன் ஆலயத்திற்கு அருகில்)

அனைத்துக் கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்

கல்முனை எழுத்தாளர் ஒருங்கிணைப்பு மையம்.
கல்முனை