கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டம் – கல்முனை வடக்கு பிரதேசத்திற்குட்பட்ட கடற்கரை பிரதேசத்தில் பூங்கா அமைக்கும் வேலைத்திட்டம் நேற்று (01) ஆரம்பித்து வைக்கப்ட்டது.
( என். சௌவியதாசன்)

அரசின் கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தில். கடற்கரை கரையோர பிரதேசங்களில் பூங்காக்கள் அமைக்கும் வேலை திட்டம் முதலாவது வேலை திட்டமாக கல்முனை – 02ல் கரையோரப் பகுதியில் நேற்றைய தினம் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் வழிகாட்டலில். கரையோர பாதுகாப்புத் திணைக்களத்தினால் வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தில் கடற் கரையோரங்களை அழகுப்படுத்தும் நோக்கோடு 14 இலட்சம் பெறுமதியான 100 பூங்காக்கள் அமைக்கபட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் . அபுபக்கர் ஆதம்பாவா அவர்களும், கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரி M. துளசிதாசன் அவர்களும், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர். T.J அதிசயராஜ் அவர்களும். மற்றும் பல உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் ,பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் நிகழ்விலே கலந்து கொண்டனர்.

You missed