திராய்க்கேணியில் படுகொலைசெய்யப்பட்ட உறவுக்ளுக்கு இன்று (06) மாலை நினைவேந்தல்!
1990 ஆம் ஆண்டில் திராய்க்கேணியில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு நினைவேந்தல் செய்து சுடரேற்றிற்றி அஞ்சலிக்கும் நிகழ்வு இன்று 06.08.2025 புதன்கிழமை மாலை 06:00 மணியளவில் இடம்பெறவுள்ளது.
திராய்க்கேணியில் 54 தமிழர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 35 ஆண்டுகள் கடக்கும் நிலையிலும் இன்னும் நீதி கிடைக்கவில்லை எனும் ஏக்கத்தோடு நீதிக்கான பிரார்த்தனைகளோடு உயிர்நீத்த உறவுகளுக்காகவும் பிரார்த்திப்போம்.
அனைத்துப் பொதுமக்களையும்இ சமூக அக்கறைமிக்கவர்களையும்இ மாலை 05:00 மணியளவில் திராய்க்கேணி மாரியம்மன் ஆலயத்திற்கு வருகை தந்து மாலை 05:30 மணிக்கு இடம்பெறவிருக்கும் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைக்கின்றார்கள்