அ.யனுஷ்பிரஜன்

கோளாவில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் அலங்கார உற்சவம் கடந்த 09.07.2025 புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

கடந்த 12 ஆம் திகதி முத்துச்சப்பரத்தில் அம்மன் திருவுருவம் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து, பக்தர்கள் பெருஞ்செறிவுடன் சூழ, வெளிவீதியில் வலம் வருதல் நடைபெற்றது.

வெளிவீதி உலா மிக எழுச்சியுடன், ஆடம்பரமாக, தாலாட்டு இசைகள், மங்கல வாத்தியங்கள், தீபாராதனை, மலர் அபிஷேகங்கள் என பக்திபரவசத்துடன் நடைபெற்றது.

மெய்யடியார்கள் உற்சாகமாக கலந்து கொண்டு, சீரான அமைப்புடன் விழாவை சிறப்பித்தனர். பக்தர்களுக்கு அன்னதானம், சிறப்புப் பூஜைகள், திருப்பல்லி, தீபாராதனை ஆகிய நிகழ்வுகளும் இடம்பெற்றன.

14.07.2025 திங்கள் இன்று திருக்குளிர்த்தியும், தீர்த்தோற்சவமும் இடம் பெற்று உற்சவம் இனிதே நிறைவு பெறும்.