குயின்டஸ் குளோட் சஞ்ஜீவன் அவர்கள் இலங்கை ஆசிரிய கல்வியலாளர் சேவைக்கு (SLTES LECTURER) தெரிவு செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பை பிறப்பிடமாகக்கொண்ட இவர் வசித்து வருகின்றார்.
மட்.சென் மைக்கல் கல்லூரியின் பழைய மாணவரான இவர் கமு/ கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை, அக்ரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி ,சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி (தே.பா) ஆகிய பாடசாலைகளிலும் உடற்கல்வி ஆசிரியராக கடமையாற்றியிருந்தார்.


ஆசிரிய சேவையில் இணைந்து 17 வருடங்களை பூர்த்தி செய்த இவர் தனது கல்விப்பயணத்தில் வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் DIPLOMA IN TEACHING  (MERIT) கல்வி அமைச்சின் விளையாட்டு விஞ்ஞானத் துறையில் ( NISS) DIPLOMA IN SPORTS SCIENCE) கல்வி மாணிப்பட்டம் (B.ED) 2nd class கல்வி முதுமாணிப்பட்டம் (M.ED) ஆகிய பட்டங்களை பூர்த்தி செய்துள்ளார்.


தற்போது கல்வியலாளர் சேவைக்கு (SLTES) நியமனம் பெற்று தனது சொந்த மண்ணாகிய மட்டக்களப்பிலுள்ள தாழங்குடா கவ்வியற்கல்லூரியில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். இவ் கல்வியலாளருக்கு கல்முனை நெற் ஊடக வலையமைப்பு இப்பிரதேசம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
இவர் ஜோசப்குயின்டஸ் யேசுமேரி குயின்டஸ் ஆகியோரின் புதல்வராவார்