முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தமிழ் .இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் கல்முனையில் நடைபெற்றது!
முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவு கூறும் வகையில் இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வும், முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கலும் கல்முனை தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
கல்முனை மாநகரில் நடைபெற்ற இந் நிகழ்வில் தமிழ் இளைஞர்சேனை நிருவாகத்தினர் ,உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.








