கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாநகரின் தென்பால் செந்நெல்விளையும் செழிப்பான வயல் நிலமும் சைவ நெறி நின்று தழைத்தோங்கி தமிழ் மக்கள் வாழும் சைவப் பழம் பெரும் கிராமமாம் நற்பிட்டிமுனையில் பன்னெடுங்காலமாக அருளாட்சி செய்கின்ற ஸ்ரீ வேம்படி விநாயகப் பெருமானின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா இன்று, மங்களகரமான விசுவாவசு வருஷம் வைகாசித் திங்கள் 03 ம் நாள் 17.05.2025 சனிக்கிழமை பூராட நட்சத்திரமும் பஞ்சமி திதியும் சித்தயோகமும் கூடிய சுபவேளையில் காலை 8.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
சங்காபிஷேகமும் பால்குட பவனியும் 19.05.2025 திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. எதிர்வரும் 24.05.2025 சனிக்கிழமை வேட்டைத் திருவிழாவும் மறுநாள் 25.05.2025 ஞாயிற்றுக்கிழமை முத்துச்சப்புர ஊர்வலமும் நடைபெறவுள்ளன.
எம்பெருமானின் தீர்த்தோற்சவம் 26.05.2025 திங்கட்கிழமை நடைபெறும்.
உற்சவ காலப் பூஜைகள் தினமும் அதிகாலை 5 மணிக்கும் மாலை 5 மணிக்கு ஆரம்பமாகி அபிஷேகம் உள்வீதி வெளிவீதி உலா என்பனவும் நடைபெற உள்ளது.
பக்த அடியார்களை ஆலயத்துக்கு வருகை தந்து ஸ்ரீ வேம்படி விநாயகப் பெருமானின் அருள் பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கின்றனர் ஆலய பரிபாலன சபையினர்.