சர்வதேச அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ள செந்தில் தொண்டமானின் உரை!

அபு அலா

பீஜிங்கில் நடைபெற்ற Belt and Road மன்றத்தின் 10வது ஆண்டு விழாவில் 130 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் கிழக்கு மாகாண ஆளுனரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் உரையாற்றினார்.

ஆளுநர் செந்தில் தொண்டமான் உரையாற்றுகையில், இவ்வுலகாமானது அனைவரும் வாழ சிறந்த இடமாகும். மனிதர்களுக்கிடையில் புரிந்துணர்வு இல்லாமையால், இன்று மனிதர்கள் வாழ முடியாத இடமாக இவ்வுலகம் மாறிக்கொண்டிருக்கின்றது.

நண்பர்களாக இருக்க வேண்டிய நாடுகள் இன்று பகைவர்களாக மாறியுள்ளனர். இம்மாநாட்டில் இருக்கும் 130 நாடுகளும் ஒன்றிணைந்து ஆயுத கலாசாரத்திற்கு முதலில் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என தெரிவித்தார்.

செந்தில் தொண்டமான் கருத்து தெரிவிக்கும் வரை இவ்வாயுத மோதல் குறித்து மௌனம் காத்த நாடுகள் அவரின் உரைக்கு பிறகு அவருடைய கருத்தை மேற்கோள்காட்டி பல தலைவர்கள் உரையாற்றினர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில செனட் தலைவர் ராபர்ட் மைல்ஸ் ஹெர்ட்ஸ்பெர்க் செந்தில் தொண்டமானின் பொதுநலமிக்க விவேகமான உரைக்கு நேரில் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

You missed