இஸ்ரேலில் தாதியர் வேலைகளுக்காக எந்தவொரு வெளித்தரப்பினருக்கும் பணம் செலுத்த வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக மாத்திரமே இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் தாதியர் வேலைவாய்ப்புகள் உள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்ற மற்றுமொரு குழுவினர் நாளை திங்கட்கிழமை (26) இஸ்ரேல் செல்லவுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி முதல் இஸ்ரேலில் தாதியர் துறையில் 389 இலங்கையர்கள் பணி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

You missed