நலன்புரிச் சங்க கொடுப்பனவுகள் தொடர்பான மேன்முறையீடுகள்; இறுதித் திகதி யூலை 10!

நலன்புரிச் சங்க கொடுப்பனவுகளுக்கென வெளியிடப்பட்டுள்ள பட்டியல் தொடர்பான மேன்முறையிடுகளை செய்வதற்கான இறுதித் திகதி எதிர்வரும் யூலை 10 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடப்படையில் “அஸ்வெசும” தரவுத்தளம் மூலம் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளின் பட்டியல் மற்றும் அவர்கள் கொடுப்பனவுக்கு தகுதிபெற்றுள்ள வகை என்பன அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது. இந்தனிலையில் பட்டியல் தொடர்பான முறைப்பாடுகளை யூன் 30 ம் திகதிக்கு முன்னர் மேற்கொள்ளுமாறு கேட்கப்பட்டிருந்தபோதும் நாடு பூராகவும் “அஸ்வெசும” பட்டியல் தொடர்பில் அதிகளவு முறைப்பாடுகள் காணப்படுகின்றமையினால் மேன்முறையீட்டுத் திகதி யூலை 10 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

இதேவேளை “அஸ்வெசும” கொடுப்பனவுகளுக்காக நாடு பூராக்கவும் 340 பிரதேச செயலக பிரிவுகளிலிருந்து 3,712,096 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் 90 சதவீதமான சரிபார்க்கும் பணிகள் மே மாதம் நடுப்பகுதிலேயே நிறைவடைந்துவிட்டதாகவும் இதனடிப்படையில் “அஸ்வெசும” கொடுப்பனவுகள் யூலை 1 ல் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You missed