140,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இன்று (28) சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ காஸ் தெரிவித்துள்ளது.

அடுத்த வாரத்தில் மேலும் பல எரிவாயு ஏற்றுமதிகள் நாட்டை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எரிவாயு விநியோகஸ்தர்கள் ஊடாக LP எரிவாயு சிலிண்டர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தலைவர் மேலும் தெரிவித்தார்.