இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதராக எரிக் மேயர் (Eric Meyer) அதிகாரப்பூர்வமாக தனது பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பிரிவில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில், அமெரிக்க துணை வெளியுறவுத்துறை செயலாளர் லாண்டாவ் (Landau) முன்னிலையில் எரிக் மேயர் பதவியேற்றார்.
தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்திய விவகாரங்களில் நீண்டகால அனுபவம் பெற்ற மூத்த அமெரிக்க வெளிநாட்டுச் சேவை அதிகாரியான மேயர், இதற்கு முன்னர் அதே பிரிவில் மூத்த துறை அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், இலங்கை–அமெரிக்க உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய தூதர் எரிக் மேயருடன் இணைந்து பணியாற்றுவதற்கு எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

