(செல்வி. வினாயகமூர்த்தி)
வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய வருடாந்த ஆடி அமாவாசை உற்சவத்தை முன்னிட்டு, அரச உத்தியோகத்தர்களின் திருவிழாவான இன்று (08) சனிக்கிழமை திருக்கோவில் கல்வி வலய மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து வழங்கும் ‘நாத நர்த்தன’ கலை நிகழ்ச்சி மற்றும் கலாசார ஊர்வலம் திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் ஆர் உதயகுமார். தலைமையில் இடம்பெற்றது.
திருக்கோவில் கல்வி வலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட மாணவர்களின் கலை கலாசார ஊர்வலம் சித்திரவேலாயுதசுவாமி ஆலயம் வரை இடம்பெற்றதுடன் மயில்,முருகன் வேடமிட்டு சிறார்கள் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர்.அத்துடன் பாடசாலை மாணவியினால் பாரம்பரிய முறையில். வேடமிட்டு பட்டயம் வாசிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து 1000 மாணவர்கள் பங்குபற்றிய “நாத நர்தன” கலை நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட. பிரதி பொலிஸ்மா அதிபர் சுஜித் வெதமுல்ல பொத்துவில் உதவி பொலிஸ் அத்தியட்சகர். தயாரத்ன மற்றும். திருக்கோவில் பிரதேசசெயலாளர் ரி. கஜேந்திரன் ,திருக்கோவில் பிரதேசசபை தவிசாளர் எஸ் .சசிக்குமார் மற்றும் அரச உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.







