அம்பாறை மாவட்டம் திராய்க்கேணி எனும் பழம்பெரும் தமிழ் கிராமத்தில் 1990.08.06 அன்று நடந்த மிலேச்சத்தனமான படுகொலைகளின் 36 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (06) திராய்க்கேணியில் இடம்பெற்றது.
1990 ம் ஆண்டு ஆவணி மாதம் 06 ம் திகதியன்று அந்தக் கிராமத்தையண்டி வாழ்ந்த சில முஸ்லீம் ஆயுத படை அரச படைகளின் துணையுடன் நடந்தேறிய மிலேச்சத்தனமான படுகொலையில் 54 பேர் துடி துடிக்க வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நாளை அக்கிராமத்து மக்கள் வருடா வருடம் நினைவேந்திவரும் நிலையில் இம்முறையும் இவ் நினைவேந்தல் இடம்பெற்றது.
படுகொலை இடம்பெற்ற ஆலய முன்றலில் இடம்பெற்ற இந் நினைவேந்தலை கிராமத்து மக்கள், இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டு தீபம் ஏற்றி பூஜைகள் செய்து நினைவேந்தினர், இந்நினைவேந்தலில் சமூக செயற்பாட்டாளர்கள் திரு.காந்தன் மற்றும் தாமோதரம் பிரதீவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நினைவேந்தியிருந்தனர்.













