(ஷனா )
கல்முனை பிரதேச செயலாளர் ரீ.எம். முஹம்மட் அன்சார் தலைமையில் இடம்பெற்ற பிரதான நிகழ்வு கல்முனை முகைதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் இன்று (08) நடைபெற்றது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாக கலந்து கொண்டு வேலை திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
இதனை அடுத்து பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்ற சிரமதான பணியிலும் பாராளுமன்ற உறுப்பினர், பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.அப்துல் மஜீட் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், பள்ளிவாசல் நிர்வாகத்தினர், பொதுமக்கள் என பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வின்போது பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா “அத்தம” தேசிய வேலை திட்டம் தொடர்பில் தெளிவு படுத்தி கருத்து தெரிவித்தார்.










