மாவட்ட மட்ட ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டியில் கார்மேல் பற்றிமா மாணவன் மேசியன் சாதனை!

கல்முனை கார்மேல் பற்றிமா தேசியப் பாடசாலை மாணவன் சங்கரதாசன் மேசியன், மாவட்ட மட்ட ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டியில் படைப்பாக்க எழுத்துப் போட்டியில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

2026ஆம் ஆண்டுக்கான மாவட்ட மட்ட ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டிகள் அக்கரைப்பற்று ஆயிஷா முஸ்லிம் மகளிர் பாடசாலையில்(03/08/2026) நடைபெற்றன.

இப்போட்டியில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசியப் பாடசாலையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 6ஆம் தர மாணவன் சங்கரதாசன் மேசியன் கலந்துகொண்டு, படைப்பாக்க எழுத்து (Creative Writing) போட்டியில் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

மாணவன் சங்கரதாசன் மேசியனின் இந்த வெற்றி, அவரது ஆங்கில மொழித்திறன் மற்றும் படைப்பாற்றலுக்கு கிடைத்துள்ள சிறப்பான அங்கீகாரமாக அமைந்துள்ளது.

மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்ற மாணவனுக்கு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் நலன் விரும்பிகள் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

கல்முனை கார்மேல் பற்றிமா தேசியப் பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ள மாணவன் சங்கரதாசன் மேசியனுக்கு கல்முனை நெற்றின் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்